இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் போரிஸ்ஜான்சன் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ராஜ குடும்பத்தின் தேவைக்கு ஏற்ப செயல்பட விரும்பினேன் என்றும் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் தான் கலந்து கொள்ளவில்லை” எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இறுதிச்சடங்கில் ராஜ குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.