Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம்.. அரச குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதை தொடர்ந்து அவரின் உடல் வின்ஸ்டர் கோட்டையில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் ரகசிய பெட்டகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த 24 பேரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிரத்தியேக பெட்டகத்தில் இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரச குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அடக்கம் செய்யப்படும் இந்த பெட்டகமானது சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது. வழக்கமாக இறந்தவர்களின் உடல் 6 அடி ஆழத்தில் தான் அடக்கம் செய்யப்படும். ஆனால் அரச குடும்பத்து உறுப்பினர்கள் மரணமடைந்தால் அவர்களின் உடல் சுமார் 16 அடி ஆழத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

இதன்படி இளவரசர் பிலிப்பின் உடலும் வரும் நாட்களில் ஆறாம் ஜார்ஜ் மன்னரின் நினைவு சேப்பலுக்கு மாற்றம் செய்யப்படும். அதாவது பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமான பின்பு தான் இந்த நிகழ்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ராணியார் காலமான பின்பு அவரது ஆசைப்படி, இருவரின் உடலும் ஒன்றாக நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே அதுவரை வின்ஸ்டர் கோட்டையில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் ரகசிய பெட்டகத்தில் இளவரசர் பிலிப் உடல் தக்க மரியாதையுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் உள்ளூர் ஊடகங்களில் வெளியான செய்தியில், இளவரசர் சார்லஸ் இறுதி சடங்கில் கலந்து கொண்ட போது துக்கத்தை அடக்க முடியாமல், கண்ணீர் வழிய சென்றதும், தன் தந்தையின் இறுதி ஊர்வல வாகனத்திற்கு மிக அருகிலேயே இளவரசிஆன் நடந்து சென்றதும், மகாராணி இரண்டாம் எலிசபெத் தனியாக இறுதிசடங்குகளில் கலந்து கொண்டதும், காண்போரின் கண்களை குளமாக்கியது என்று குறிப்பிட்டபட்டுள்ளது.

Categories

Tech |