Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் கடைசி ஆசை…. உடல் நல்லடக்கம் செய்யப்படாது…. வெளியான பகீர் தகவல்….!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படாது என்ற  தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படாது என்றும் அவரின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் எனவும் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மகாராணியார் எலிசபெத்தின் இறப்பிற்குப் பின்னர் தான் இருவரின் உடல்களும் ஒன்றாக அடக்கம் செய்யப்படும் எனவும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இளவரசரின் ஆசைப்படி அரசு மரியாதை நடைபெறாது என்றும் அதற்கு பதிலாக இராணுவ மரியாதை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |