Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் மரணத்தை கொண்டாட வந்த நபர்கள்.. கையில் பாட்டில்களுடன் இருக்கும் வீடியோ வெளியீடு..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணத்தை அறிந்ததும் அரண்மனை முன் கூடிய மக்களில் இருவர் பாட்டில்களுடன் வந்து நிற்கும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

பிரிட்டன் இளவரசர் பிலிப் நேற்று காலமானார். இந்த செய்தியை அறிந்தவுடன் பொதுமக்கள் பலரும் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டனர். இதில் சில பேர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். இந்நிலையில் இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்திருந்தனர்.

அப்போது சைக்கிளில் வந்த இருவர் தங்கள் கையில் Prosecco வை வைத்திருக்கின்றனர். இதனை பார்த்து, ஒரு நபர் அவர்களுக்கு அருகில் சென்று இதை நீங்கள் இங்கு திறக்க மாட்டார்கள் தானே என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் இல்லை இல்லை என்கின்றனர். இதனால் அந்த நபர் அரண்மனைக்கு வெளியில் இவ்வாறு செயல்படுவது மரியாதை அல்ல என்று கூறுகிறார்.

அப்போது இருவரில் ஒரு நபர், நாங்கள் மரணத்தை கொண்டாடுவதற்காக வந்துள்ளோம் என்று கூறுகிறார். மேலும் வீடியோ பதிவு செய்கிறீர்களா? அதனை உடனே நிறுத்துங்கள் என்று கூறுகிறார். அதற்கு அந்த நபர் நீங்கள் இந்த பாட்டில்களை இங்கு திறக்காமல் இருந்தால் மட்டுமே வீடியோவை நிறுத்துவோம் என்று கூறுகிறார். இதனால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

Categories

Tech |