பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு பொதுமக்கள் ஏராளமான பூக்களுடன் அஞ்சலி செலுத்தியிருப்பதை கண்டவுடன் இளவரசர் சார்லஸ் கண்கலங்கி நின்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை வரை நாடு முழுவதும் துக்க தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது கொரோனா காலமாக இருப்பதால் மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே சுமார் நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
மேலும் அங்கு கொண்டுவரப்பட்ட அனைத்துப் பூக்களும் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இருக்கும் மார்ல்பரோ மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் கொரோனா தீவிரமாக இருப்பதால் மக்களுக்கு பூக்களை போடாதீர்கள் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் நீங்கள் அஞ்சலி செலுத்த விரும்பினால் தொண்டு நிறுவனங்களுக்கு முடிந்த நன்கொடையை வழங்குங்கள் என்று கூறப்பட்டிருந்தது.
எனினும் காலம் காலமாக அஞ்சலி செலுத்துவது என்றாலே பூக்களால் தான் என்பதால் மக்கள் அவர்கள் கூறியதை பொருட்படுத்தாமல், பூக்களால் நிரப்பி வருகின்றனர். இந்நிலையில் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரின் மனைவி இளவரசி கமீலா ஆகிய இருவரும் எஸ்டி ஜேம்ஸ் பேலஸில் இருக்கும் மார்ல்போர் அரண்மனைக்கு வந்திருந்தனர்.
அப்போது பொதுமக்கள் இளவரசர் பிலிப்பிற்கு அதிகமான பூக்களுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு இருப்பதைக் கண்டவுடன் கண்கலங்கி உள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.