இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் மேலாடை அணியாமல் கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி காலமானார். அவரின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இளவரசன் இறுதிச் சடங்கின்போது பெண் ஒருவர் மேலாடை அணியாமல் வந்து கூச்சலிட்ட சம்பவத்தின் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பெண் இளவரசர் இறுதிச் சடங்கின் போது மேலாடை அணியாமல் வந்து Save the Planet என கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
Topless woman arrested outside Windsor Castle during Prince Philip’s funeral.#PrincePhilipfuneral
1/2 pic.twitter.com/IxAtOelN63— Farid Ahmed (Qureshi) (@FaridQureshi_UK) April 17, 2021
இதனிடையே அந்தப் பெண்ணின் புகைப்படம் மற்றும் சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வந்தது. இந்நிலையில் அந்தப் பெண் SurreyMerstham பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் Marissa Scott எனவும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண் ஒழுங்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட Marissa Scott ஜூன் 10ஆம் தேதி Slough Magistrates நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.