பிரிட்டன் இளவரசர் ஹரி தன் தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கிற்கு வந்த போது புறக்கணிக்கப்பட்டதாக அரச குடும்ப நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து பிரிட்டன் வந்தார். அப்போது இறுதிச்சடங்கு நடைபெறும் சமயத்தில் ஹரி மற்றும் வில்லியம் இருவருக்கும் இடையில் பீற்றர் பிலிப் நிறுத்தப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதே சமயத்தில் இளவரசி கேட் தானாகவே முயற்சி எடுத்து சகோதரர்களான வில்லியம் மற்றும் ஹரியை பேச வைத்ததையும் பார்க்க முடிந்தது.
எனினும் இளவரசி ஆன் போன்ற சிலர் ஹரியின் முகத்தை கூட பார்க்காமல், அவரை முழுவதுமாக புறக்கணித்திருக்கின்றனர். இதனால் ஹரி அதிர்ந்து போயிருக்கிறார். இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதம் முதல் தேதியன்று இளவரசி டயானாவினுடைய சிலை கென்சிங்டன் மாளிகையில் திறக்கப்படவிருக்கிறது.
அதாவது இளவரசி டயானா மரணமடைந்து 20 ஆவது வருடத்தை நினைவு கூறுவதற்காக மற்றும் அவர் பிரிட்டன் மட்டுமல்லாமல் உலகம் அனைத்திற்கும் நேர்மறை எண்ணங்களை விதைத்ததை அங்கீகரிக்கும் விதமாகவும் சிலை நிறுவப்பட இருக்கிறது. ஏற்கனவே வில்லியம் மற்றும் ஹரி இருவரும் சேர்ந்து அந்த சிலையை நிறுவவுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தாத்தாவின் இறுதிச்சடங்கில் ஹரியை சிலர் புறக்கணித்ததால் அவர் தன் தாயான டயானாவின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. மேலும் ஹரியின் மனைவி மேகன் இரண்டாவது கர்ப்பமாக இருப்பதால் அவரின் பிரசவத்தை காரணப்படுத்தி சிலை திறப்பு நிகழ்ச்சியை ஹரி தவிர்க்கலாம் என்று அரச குடும்பத்தின் நிபுணர் Russell Myers கூறியுள்ளார்.