Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் இறுதி சடங்கு…. முப்பது பேர்களுக்கு மட்டும் அனுமதி…. வெளியான நபர்களின் பட்டியல்….!!

கொரோனா காலகட்டம் நிலவுவதால் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் 30 நபர்களின் பட்டியலை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் வெள்ளிக்கிழமை காலமானார் அவரின் நல்லடக்கம் குறித்து பக்கிங்காம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில் எதிர்வரும் சனிகிழமையில் இறுதி சடங்கு நடைபெறும் என்றும் தற்போது கொரோனா காலக்கட்டம் நிலவுவதால் 30 பேர்கள் மட்டும் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச குடும்பம் உலக முழுவதிலும் இருந்து 8௦௦ விருந்தினர்களுடன் மிக விமர்சையாக இறுதிச் சடங்கை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் இளவரசர் அதை விரும்பவில்லை என்பதால் எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறுதிச்சடங்கில் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களின் துணைவர்கள், இளவரசிகள் வைஸ்அட்மிரல் சர்திமோதி லாரன்ஸ் ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராணியார் எலிசபெத்தின் 8 பேரப்பிள்ளைகள் மற்றும் வருங்கால ராணியாக வாய்ப்புள்ள கேட்மிடில்டன் ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் ஹரியின் மனைவி கர்ப்பமாக உள்ளதால் அவரால் கலந்துகொள்ள இயலாது எனவே பிரிட்டன் ராணுவ தளபதி ஒருவர் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரச குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வதால் பிரதமர் போரிஸ்ஜான்சன் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |