பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் உடல் 8 நாட்களுக்கு பிறகு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரிட்டன் இளவரசர் பிலிப் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அதனைத்தொடர்ந்து சுமார் எட்டு தினங்கள் அவருக்கு தூக்கம் அனுசரிக்கப்பட்டது. அதன் பிறகு இன்று அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை சுமார் 3:00 மணியளவில் தொடங்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, வின்ஸ்டரில் துப்பாக்கி சத்தத்துடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மதியம் 2:30 மணியளவில் இசை வாத்தியங்கள் முழங்க, லேண்ட் ரோவர் வாகனத்தில் அவரின் சவப்பெட்டி ஏற்றப்பட்டது. அதன்பின்பு தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலம் தேவாலயத்தை சென்றடைய 8 நிமிடங்கள் ஆனது.
மேலும் வின்ஸ்டர் மாளிகையில் கிழக்கு புல்வெளியிலிருந்து, தொடங்கி இறுதி ஊர்வல பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டது. மேலும் இளவரசர் சார்லஸ் இளவரசி அன்னே ஆகியோர் தலைமையில் மூத்த ராயல் குடும்பத்தினர் சவப்பெட்டியை பின்தொடர்ந்து பங்கேற்றுக்கொண்டனர்.