மறைந்த பிரிட்டன் இளவரசர் பிலிப் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் நல்லடக்கம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டார் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் சொத்து மதிப்பு குறித்து செலிபிரிட்டி இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் மகாராணியை திருமணம் செய்யும் முன்னரே கிரேக்க ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரும் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என தெரிவித்துள்ளது. இளவரசர் பிலிப் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் என்றும் அவர் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் மகாராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு $28 பில்லியன் ஆகும். ஆனால் அதனை சேர்க்காமல் இளவரசர் பிலிப்பின் சொத்து மட்டும் $30 பில்லியன் என செலிபிரிட்டி இணையதளம் தெரிவித்துள்ளது.