இளவரசர் பிலிப் கடைசி நாட்களில் தன் மகன் சார்லஸிடம் சில கோரிக்கைகளை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார் அவரின் நல்லடக்கம் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டார் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தன் மகன் சார்லஸிடம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து ராயல் கமென்டர் ராபர்ட் ஜாக்சன் இளவரசர் பிலிப் தான் இறக்கப் போகிறோம் என்பதை அறிந்து தன் மகனிடம் உணர்ச்சிப்பூர்வமாக உரையாடியுள்ளார் எனக் கூறினார்.
இளவரசர் பிலிப் பிப்ரவரி மாதம் இறுதியில் இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருந்தபோது தன் மகனை அழைத்து உரையாடல் நடத்தியதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இளவரசர் பிலிப் தன் மறைவிற்கு பின்னர் முக்கிய கடமையாக தன் மனைவி எலிசபெத்தை கவனித்துக் கொள்ள வேண்டுமென்றும் அதுவே தமக்கு செய்யும் மிகப்பெரிய கடமையாகும் என கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜ குடும்ப வாரிசுகள் குடும்பத்தை இவ்வாறு வழிநடத்த வேண்டும் என்ற ஆலோசனையையும் வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.