பிரிட்டன் இளவரசர் ஹரியை திருமணத்திற்கு பிறகு அரண்மனை ஊழியர்கள் அவருக்கு பணயக்கைதி என்று ரகசியமாக பெயரிட்டு தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹரி மெர்க்கலுடன் திருமணம் முடிவான பிறகு அரண்மனை ஊழியர்கள் ஹரியை பணயக்கைதி என்று ரகசியமாக பெயரிட்டு அழைத்துள்ளனர். இதுமட்டுமின்றி மனைவி மெர்க்கலையும் சச்சரவை ஏற்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர். இதனால் ஹரிக்கும் அரண்மனை ஊழியர்களுக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டு உள்ளது .
கடந்த 2018 ஆம் ஆண்டு வின்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் இளவரசர் ஹரி மற்றும் மோகனுக்கு திருமணம் நடந்தது. அப்போது திருமணத்தில் தலையில் சூடிக்கொள்ளும் தலையணியை ராணியின் விருப்பமான ஊழியரான ஏஞ்சலா கெல்லி அதனை மேகனிடம் ஒப்படைக்க மறுத்துள்ளார். இதனால் இளவரசர் ஹரி மிகவும் கோபம் கொண்டதால் திருமணம் நடந்து முடியும் வரை அங்கு இருக்கும் அனைவருக்கும் கடும் மன அழுத்தத்தை அளித்ததாக கூறப்படுகிறது.