Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரி மனைவியின் குற்றச்சாட்டு- பதிலடி கொடுத்த பிரிட்டன் அமைச்சர் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அரச குடும்பத்தை பற்றி பேட்டியில் குற்றம்சாட்டிய தொடர்பில் நாட்டின் குழந்தைகள் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினரின்  ஓபரா வின்பிரே உடனான நேர்காணல் நேற்றிரவு ஒளிபரப்பப்பட்டது. அந்த நேர்காணலில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அரச குடும்பத்தை பற்றி சரமாரியாக குற்றம்சாட்டிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பியது.அந்தப் பேட்டியில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன், பிரிட்டன் அரசு குடும்ப உறுப்பினர் ஒருவர் தங்கள் மகனின் தோல் எவ்வளவு கருப்பாக இருக்கக்கூடும் என்று கூறியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பிரிட்டனின் குழந்தைகள் அமைச்சர் விக்கி போர்ட் மேகனின் குற்றச்சாட்டை அடுத்து எங்களின் சமூகத்தில் இனவெறிக்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |