Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரி தன் முடிவில் உறுதி… அனைத்து கவுரவ பட்டங்களும் பறிப்பு… அரச குடும்பத்தினர் உத்தரவு…!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்திலிருந்து விலகியதால் அவரின் ராணுவப் பட்டங்கள் பறிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பிரிட்டன் இளவரசர் ஹாரி கடந்த 2018ம் வருடத்தில் மேனன் என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் இத்தம்பதி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி சாதாரண மக்களாக வாழ விரும்புவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து அமெரிக்காவில் சாதாரண மக்களாகவே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த வருடத்தின் துவக்கத்தில் தன் பாட்டியான இரண்டாம் எலிசபெத் ராணி கட்டாய படுத்தியதால் அரச குடும்பத்திலிருந்து விலகுவது தொடர்பில் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய போவதாக அறிவித்திருந்தார். எனினும் தற்போது தங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று இவர்கள் உறுதியாக தெரிவித்ததாக தகவல் வெளியானது.

எனவே முன்னாள் ராணுவ வீரர் என்ற அடிப்படையில் இளவரசர் ஹரிக்கு கவுரவ பட்டங்கள், காமன்வெல்த் விருதுகள், புரவலர் அந்தஸ்து போன்ற பல பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவை அனைத்தையும் மகாராணியிடம் அவர் ஒப்படைக்க வேண்டும். இதேபோன்று இளவரசிக்குரிய கௌரவப்பட்டங்கள் பெற்றிருந்தார் மேகன். தற்போதும் அவரும் தன் அனைத்து பட்டங்களையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |