நேர்காணல் நிகழ்ச்சியில் பேட்டி அளித்த மேகன் கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் இளவரசர் வில்லியம் மனைவியை குறிவைத்து உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஹரி – மேகன். இவர்கள் இருவரும் பிரிட்டன் அரண்மனையிலிருந்து வெளியேறியதற்கு காரணம் எதுவும் சொல்லப்படாத நிலையில் தற்போது இவர்கள் அளித்துள்ள பேட்டியில் பிரிட்டன் அரண்மனையில் தன் மீது பாகுபாடு காட்டப்பட்டதாகவும், மேலும் இன ரீதியான கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் தான் நாங்கள் வெளியேறியதாகவும் மேகன் கூறியுள்ளார். இதனையடுத்து மேகன் கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் இளவரசி கேட் மிடில்டனை குறிவைத்து பேசிய மாதிரி இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அரண்மனையில் இளவரசர் வில்லியமும் , அவரது மனைவி கேட் மிடில்டனும், இளவரசர் ஹரியின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்துள்ளனர்.
மேலும் கேட் மிடில்டன் இளவரசர் ஹரியை ஒரு சகோதரியை போலவும், தோழியை போலவும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் இளவரசர் ஹரி, மேகனை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன் பின்புதான் சகோதரர்களிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கேட் மிடில்டன் இளவரசர் ஹரியின் மீது வைத்துள்ள பாசம் மேகனுக்கு ஒருவித பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.அதனால் மேகன், இளவரசி கேட் மிட்டிலுடன் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், அவரை அழவைத்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த சம்பவம்தான் மேகனின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்து அவரை பின்னடைவுக்கு தள்ளியதாக தகவல் வெளியாகியுள்ளது.