Categories
உலக செய்திகள்

இளவரசி டயானா காதலரா இவர் ? எப்படி இருக்க வேண்டிய மனுஷன்… வெளியே கசிந்த உண்மை தகவல் ..!!

மறைந்த இளவரசியான டயானாவின் முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹெவிட் தோட்டக்காரராக பணியாற்றி வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் இளவரசியான டயானா 1986 முதல் சுமார் 5 ஆண்டு காலமாக ஜேம்ஸ் ஹெவிட் என்பவரை காதலித்துள்ளார். தற்போது 62 வயதாகும் ஜேம்ஸ் ஹெவிட் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட வளாகத்தில் ஆண்டுக்கு 4000 பவுண்டுகள் ஊதியத்திற்கு தோட்டக்காரராக பணிபுரிந்து வருகிறார் .ஆனால் இவர் மீது மக்களால் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதற்கு காரணம் அவர் ஒரு குறிப்பிட்ட தோட்டக்காரர் ஆக வேலை செய்யவில்லை. ஆனால் அவர் ஒரு பழங்கால யூ மரத்தை ஒழுங்குபடுத்தும்  பெயரில் அந்த மரத்தை சிதைத்த குற்றச்சாட்டு இன்று வரை விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

அந்த குடியிருப்பில் இருக்கும் மக்களுக்கு  அவருடன் இந்த பிரச்சனையால் பல வாக்குவாதங்களும் ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கின்றனர். ஏற்கனவே இளவரசி டயானா 1995ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆவணப்பட ஒன்றில் அவருக்கும் ஜேம்ஸ் ஹெவிட்க்கான உறவை ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் இவர்களுடைய சந்திப்பு ஜேம்ஸின் தாயாருக்கு சொந்தமான இல்லத்திலேயே நடக்கும் என்று டயானாவின் பாதுகாப்பு அதிகாரியாக  செயல்பட்ட  கென் வர்பெ எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தது. ஒரு தோட்டக்காரர் இளவரசியின் காதலராக இருந்துள்ளார் என்பது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

Categories

Tech |