இளவரசி டயானா இறப்பதற்கு முன்பாக நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் இளவரசி டயானாவின் பாதுகாவலர்களில் ஒருவர் லீ சேன்சம். இவர் மறைந்த இளவரசி டயானா பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் உள்ள சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 1997-ம் ஆண்டு இளவரசி டயானா தன்னுடைய 2 மகன்களுடன் ட்ராப்ஸ் என்ற பகுதியில் விடுமுறையை கொண்டாடியுள்ளார். அப்போது தன்னுடைய பாதுகாவலரான லீ சேன்சமிடம் பாப்பராசி எனப்படும் ஊடகம் தன்னை மிகவும் தொல்லை செய்து வருவதாகவும், இந்த ஊடகத்தின் பார்வையில் இருந்து என்னுடைய மகன்களை காப்பதற்காகவும் நாட்டை விட்டு வெளியேறப் போவதாக கூறியுள்ளார்.
அவர் இங்கிலாந்திலிருந்து வெளியேறி அமெரிக்காவிற்கு தனியாக குடிபெயர முடிவு செய்துள்ளார். இளவரசி டயானா அமெரிக்காவிற்கு சென்றவுடன் தன்னுடைய மகன்களை விடுமுறை நாட்களில் மட்டும் பார்ப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இப்படி செய்வதால் ஊடகத்தின் பிடியிலிருந்து தான் தப்பிப்பதோடு என்னுடைய குழந்தைகளையும் காப்பாற்ற முடியும் லீ சேன்சமிடம் டயானா கூறியுள்ளதாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இளவரசி டயானா மற்றும் அவருடைய காதலர் டோடி ஆயாகியோர் கடந்த 1997-ம் ஆண்டு கார் விபத்தில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்