சசெக்ஸின் டச்சஸ் மேகன் மார்க்கல் அவருடைய இளம் வயதில் நிர்வாண ஸ்பாவில் சந்தித்த சங்கடத்தை பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார்.
இளவரசர் ஹரியும், மேகன் மார்க்கலும் கடந்த 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 18 மில்லியன் பவுண்டு மதிப்பிலான பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஆடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான spotify-யுடன் மேற்கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் spotify-யில் மேகன் மார்க்கலால் ஆரம்பிக்கப்பட்ட “ஆர்க்கிடைப்ஸ்” (Archetypes) என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், இதுவரை மூன்று அத்தியாயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் பிரிட்டன் மகாராணி 2- ம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இளவரசி மேகன் மார்க்கல் நடத்தி வந்த spotify போட்காஸ்ட் நிகழ்ச்சி திடீரென இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மகாராணி எலிசபெத்தின் துக்கம் நிறைவடைந்த நிலையில், நான்கு வார இடைவெளிக்கு பிறகு இளவரசி மேகன் மார்க்கலின் spotify போட்காஸ்ட் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 4 ஆம் தேதியான நேற்று மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் பத்திரிக்கையாளர் லிசா லிங் மற்றும் நகைச்சுவை நடிகர் மார்கரெட் சோ (Margaret Cho) ஆகியோருடன் பொழுதுபோக்குத் துறையில் ஆசிய அமெரிக்க பெண்கள் செல்வது தொடர்பாக இளவரசி மேகன் மார்க்கல் உரையாடல் நடத்தினார். அப்பொழுது சசெக்ஸின் டச்சஸ் மேகன் மார்க்கல் இளம் வயதில் தனது தாயார் டோரியா ராக்லாண்டுடன் கொரிய ஸ்பாக்களுக்குச் சென்றது தொடர்பான தருணத்தை பகிர்ந்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “பருவமடையும் பெண்ணுக்கு இத்தகைய தருணம் மிகவும் தாழ்மையான அனுபவம், ஏனென்றால் 9 வயது முதல் 90 வயது வரை உள்ள பெண்கள் அனைவரும் அறைக்குள் நிர்வாணமாக நடந்து கொண்டு வரிசை வரிசையாக வைக்கப்பட்டு இருந்த மேஜைகளில் உடலை தேய்த்து கழுவதற்காக (body scrub) காத்திருப்பார்கள் என தெரிவித்தார். ஆனால் தனக்கோ அப்போது ஒரு நீச்சல் உடை மட்டுமே வேண்டும் என 41 வயதுடைய மேகன் மார்க்கல் spotify போட்காஸ்ட் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். மேலும் நான் அந்த வாலிப சங்கடத்தை முடித்தவுடன், என் அம்மாவும் நானும், மாடியில் இருக்கும் அறையில் உட்கார்ந்து, மிகவும் சுவையான நூடுல்ஸை சாப்பிடுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.