Categories
உலக செய்திகள்

இளவரசி மேகன் பணியாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வார்…. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ….!!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு வந்துள்ள மேகன் மார்க்கல் ஆச்சரியமளிக்கும் விதமாக, இளவரசர் ஹரி , இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோருடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை வின்ட்சர் கோட்டைக்கு வெளியே ராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க வந்த பொதுமக்களை நடந்து சென்று சந்தித்துள்ளார். அப்பொழுது தான் அடையாளம் தெரியாத ஆண் உதவியாளருடன் மேகன் மார்க்கலின் உரையாடலைக் காட்டும் ஒரு வீடியோ, ட்விட்டரில் மில்லியன் கணக்கான பார்வைகளை ஈர்த்து வருகின்றது. இந்த வீடியோ மோகனின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என்ற வகையில் இருதரப்பினரிடையே விவாதத்தையும் தூண்டியுள்ளது.

மேகன் மார்க்கல் அரச உதவியாளருடன் பேசும் அந்த வீடியோ வெவ்வேறு விதமாக வெளியானது. ஒரு வீடியோவில் அவர் உண்மையில் என்ன பேசுகின்றார் என்பது கேட்கவில்லை. ஆனால் அவரது முக பாவனைகளை வைத்து அவர் உதவியாளருடன் கோபமாகவும் கடுமையான வார்த்தைகளை பேசுவதாகவும் புரிந்துகொள்ளப்படுகின்றது. அவர் நடந்து கொள்வது சரியில்லை என்பது போல சிலர் சமூக வளைதளங்களில் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆனால், மற்றோரு பயனர் அதே விடியோவை மேகன் பேசுவது என்ன என்பது நன்கு கேட்கும்படியாக பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த பிறகு, மேகன் உண்மையின் உதவியாளரிடம் தன்மையாகவும் மரியாதையான வார்த்தைகளையே பயன்படுத்தியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இதனால், மேகன் மார்களின் எதிர்ப்பாளர்களுக்கு மற்ற பயனர்களுக்குமிடையே வார்த்தை போர் நடந்துள்ளது. மேகனிடமிருந்து பூங்கொத்துக்களை வாங்கிக்கொள்ள வந்த அந்த பணியாளரிடம் உண்மையில் மேகன் சொல்வது என்னவென்றால் “பூங்கொத்துக்களை நானே அங்கு சென்று வைத்துவிடுகின்றேன் என்று நான் அவர்களிடம் கூறியுள்ளேன், அதனால் உங்கள் உதவிக்கு நன்றி, பாராட்டுகின்றேன்” என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், ஒரு தரப்பினர், அங்கு கமெராக்கள் தன்னை படம் பிடிப்பதனால் மேகன் அப்படி சாதுரியமாக பேசியதாகவும், அவர் முகத்தில் ஒரு எரிச்சலான உணர்வையே வெளிப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

Categories

Tech |