சாலையில் செல்பவர்களை இளைஞர் கத்தியால் கொடூரமாக குத்தி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வீடனில் வெட்லாண்டா பகுதியில் உள்ள பிரதான சாலையில் கத்தியுடன் போவோர் வருவோரை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை அறிந்த போலீசார் விரைந்து வந்து அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து பின்னர் கைது செய்து செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் இல்லை என்று கூறியிருக்கின்றனர். மற்ற தகவல்கள் எதையும் அவர்கள் வெளியிடவில்லை.
ஆனால் காயமடைந்த பலர் கவலைக்கிடமாகவே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர் செல்வந்தர் வீட்டு பிள்ளை எனவும் பல அதிகாரிகள் அவருக்கு தெரிந்தவர்கள் எனவும் அதனால்தான் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எந்த வகை என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் வெளியிட மறுக்கின்றனர் . மேலும் துப்பாக்கியால் சுட்ட அந்த இளைஞரை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.