Categories
தேசிய செய்திகள்

இளைஞருடன் மிருதுளாவுக்கு கள்ளக்காதல்….. கணவனை குக்கரால் கொலை செய்த கொடூரம்….!!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மதுரவாடா என்ற பகுதியை சேர்ந்த முரளி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மிருதுளா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முரளி வெளிநாட்டுக்கு வேலை கிடைத்து சென்றுவிட மனைவி மகனை ஊரிலேயே விட்டு சென்றுள்ளார். அந்த சமயத்தில் மிருதுளாவுக்கு இதே பகுதியில் இருக்கும் சங்கர் என்ற 18 வயது இளைஞர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் சிறிது நாட்களில் கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் இது உல்லாசமாக இருக்க தொடங்கினர்.

அப்படி இருக்கும்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு முரளி வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது முரளியிடம் மிருதுளா சரிவர பேசவில்லை. முரளி நெருங்கி போய் பேசினாலும் அவரிடம் மிருதுளா நெருக்கம் காட்டவில்லை. இதனால் முரளிக்கு சந்தேகம் ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய முரளி தனது தாயை பார்க்க சென்றார். அந்த சமயத்தில் மிருதுளா தனது காதலனை அழைத்து தன் கணவர் ஊருக்கு செல்லும் வரை தன்னால் உன்னை சந்திக்க இயலாது என்று கூற அவர் நாம் இருவரும் சேர்ந்து அவரை கொன்று விடுவோம் என்று கூறியுள்ளார்.

இதற்கு மிருதுளாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ தினத்தன்று இரவு முரளி தூங்கிக் கொண்டிருக்கும் போது தலையில் குக்கரை கொண்டு அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் காதலனை அழைத்து இருவரும் முரளியின் சடலத்தை யாரும் பார்க்காத இடத்தில் தூக்கி எறிந்து தீயிட்டு கொளுத்தி விட்டனர். இதனிடையே முரளியின் தாய் தனது மகனை வீட்டிற்கு தேடிவந்து பார்த்தபோது அவர் காணாமல் போய்விட்டதாக மனைவி கூற, காவல் நிலையத்தில் முரளியின் தாய் புகார் கொடுத்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் மிருதுளாவை விசாரணை செய்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதை எடுத்து காவல் அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |