Categories
தேசிய செய்திகள்

இளைஞரை கொடூரமாக கொன்று…. துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி எடுத்த பயங்கரம்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மாமன் மகனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்று துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் குந்தி என்ற மாவட்டத்தில் உள்ள தசாய் முண்டா என்பவரது குடும்பத்தினர் விவசாய வேலைக்கு சென்று உள்ளனர். அவர்களது மகன் கணுமுண்டா வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் குடும்பத்தினர் வீடு திரும்பிய போது மகனை காணவில்லை.

தசாயின் மருமகன் சாகர் முண்டா, கணுவை தனது நண்பர்களுடன் வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் இளைஞரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்பி எடுத்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |