Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இளைஞரை தாக்கி…. வாயில் சிறுநீர் கழித்த கொடூரம்…!!

இளைஞர் ஒருவரை நான்கு பேர் சேர்ந்து தாக்கி வாயில் சிறுநீர் கழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பட்டியலினத்தை சேர்ந்தவர் மதன். இளைஞரான இவரை சம்பவத்தன்று 4 பேர் கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அந்த நான்கு பேரும் மதுபோதையில் மதனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து மயக்க நிலைக்கு சென்ற மதன் குடிக்கத் தண்ணீர் கேட்ட போது வாயில் சிறுநீர் கழித்து அவமானபடுத்தியுள்ளனர். இதையடுத்து போதையில் இருந்த அந்த 4 பேரும் நன்கு தூங்கி உள்ளனர்.

அப்போது மதன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மதன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மதன் அளித்த புகாரின் அடிப்படையில் பிரதீர், மெய்கண்டன் மூர்த்தி ஆகியோர் மீது காவல்துறையினர்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |