மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் நமது மாவட்டத்தில் வருகின்ற 1-ஆம் தேதி முதல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் ஏற்கனவே பதிவு செய்து இருக்கும் இளைஞர்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும். மேலும் என்ஜினியரிங், மருத்துவம், கால்நடை, விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழில் படிப்புகளை முடித்து 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். மேலும் உதவித்தொகை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரரின் வயது 45 ஆக இருக்க வேண்டும். இதனையடுத்து விண்ணப்பிதாரர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொண்டு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்ட பிரிவில், அனைத்து அசல் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சேர்த்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.