குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பை கிராமத்து இளைஞர்கள் தைரியமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழகத்தில் சில கிராமங்கள் வனப்பகுதிக்கு அருகே அமைந்திருப்பதால் அங்கு வாழும் விலங்குகள் சில சமயங்களில் உணவு தேடி கிராமத்திற்குள் வருவது வழக்கமாக இருக்கிறது. அவ்வகையில் மதுரை மாவட்டம் கொட்டாரம்பட்டியில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே இருந்த மலைப்பகுதியிலிருந்து வனஉயிரியான 10 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் கொட்டாரம் பகுதியிலிருக்கும் வன துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் .
இதற்கிடையே கிராமத்திலுள்ள இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து அந்தப் பாம்பை பிடித்து விட்டார்கள். இந்நிலையில் வனத்துறையினர் வந்ததும் பாம்பை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு கலைந்து சென்றனர் . வனத்துறையினர் பாம்பை வலச்சேரிப்பட்டி வனப்பகுதியில் விட்டுள்ளனர்.