சென்னை தலைமைச் செயலகத்தில் பல திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உள்ளார். இந்நிகழ்ச்சியில் பல்வளத்துறை அமைச்சர் நாசர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களுடன் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதிய கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து தேசிய அளவிலான திறன் போட்டிகளில் பதக்கம் வென்ற இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.