Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 4000 பேருக்கு வேலை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டுகளில் ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வந்தனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. மே 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வுகள் மூலமாக படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. அதனை நிறைவேற்றும் வகையில் அரசு தொடர்ந்து பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடந்தது.

அதில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திருச்சி உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது என்றும் இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உயர் கல்வித்துறை அமைச்சர் வருகின்ற இருபத்தி ஒன்றாம் தேதி திருச்சிக்கு வருகிறார்,உயர் கல்வியை முடித்தவுடன் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்க அரசு வழிகாட்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |