Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 74,000 பேருக்கு வேலை…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று தமிழக அரசு சார்பாக நடத்தப்பட உள்ள வேலைவாய்ப்பு முகாமில் திமுக இளைஞர் அணிச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் ஏற்பாடுகள் குறித்து தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இதுவரை 57 இடங்களில் முகாம்களை நடத்தி 74 ஆயிரம் வேலைவாய்ப்புகளை படித்த இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

இன்று ஓசூரில் நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் 300 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு ஏற்று ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இப்போதுதான் எங்கேயோ காணாமல் போயிருந்த வேலைவாய்ப்புத்துறை தற்போது மீட்டெடுத்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றோம். மேலும் தொழிற்சாலைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக்காத நிறுவனங்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |