Categories
மாநில செய்திகள்

இளைஞர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் சொன்ன சூப்பர் அறிவிப்பு……!!!!

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கேள்வி மற்றும் விவாதங்கள் நடைபெற்றது. 

தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் கேள்வி மற்றும் விவாதங்கள் நடைபெற்றது. இந்த கேள்வி நேரத்தின் போது தி.மு.க பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருவதாகவும், இவர்களின் வாழ்வில் அரசு விளக்கேற்றுமா என கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டகுடி கணேசன் பதிலளித்தார். அவர் தி.மு.க பொறுப்பேற்ற பிறகு 36 மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது எனவும், இதன் மூலம் 50,000  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இதேப்போன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என கூறினார்.

Categories

Tech |