2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு முதற்கட்டமாக ரூபாய் ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தனது உரையில் தெரிவித்துள்ளார். மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூபாய் 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் பயிர் வகைகள் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.