யாரையும் நம்பி அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். தயவுசெய்து இளைஞர்கள் விழிப்புடன் இருங்கள். பணம் கொடுத்து யாராவது ஏமாந்தவர்கள் இருந்தால் புகார் அளிக்க முன் வாருங்கள். அவர்கள் புகாரின்பேரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி யாரையும் நம்பி பணம் கொடுக்க வேண்டாம். இதில் பெரும்பாலும் இளைஞர்களே ஏமாறுகின்றனர். அதனால் இனி வரும் காலங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
Categories