மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வருடம் தோறும் தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு பி மற்றும் சி பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுகிறது. இந்த வருடமும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 20,000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப தேதியும் நேற்று முன்தினம் முடிவடைய இருந்தது. இந்நிலையில், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான (Combined Graduate Level) தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, காலக்கெடுவை 13.10.2022 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
Categories