Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே…! மார்ச் 5 ,6 தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

புதுச்சேரியில் நிபுணா ,சேவா  என்ற சேவை நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர்.  தற்போது இந்தியா முழுவதும் பரவல் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து பல்வேறு வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. தற்போது புதுச்சேரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு  வெளியிட்டிருந்தார்.

இந்த முகாம்  நிபுனா , சேவா என்று சேவை நிறுவனம் சார்பில் வருகிற மார்ச் 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்நிறுவனம் சார்பாக  ஹைதராபாத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர். 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. அதேபோல் தற்போது 100 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த வேலை வாய்ப்பும் மூலமாக 15 ஆயிரம் பேருக்கு வேலை உருவாக்கப்படும் என்று புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். வேலையில்லா இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |