படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்காக திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இந்த முகாமில் தொழில்துறை, சேவைத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது.
இந்த முகாமில் 8-ம் வகுப்பு முதல் ஐடிஐ வரை கல்வித்தகுதி உடைய 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைதேடும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்வி சான்று நகலுடன் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்துகொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பை பெறுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மேலும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிவாய்ப்பு பெற்றால், தங்களது வேலை வாய்ப்பக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.