தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் ஜூலை 30ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு துறையின் இணையதளம் முகவரி பக்கத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் கொள்ளுகாரன் குட்டையில் உள்ள வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் இது குறித்த தகவல்களை பெற 04142-290039, 9499055908 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.