Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே!… இன்று [ஏப்ரல் 1] மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணாம போங்க…!!!!

இன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் நெறி காட்டும் மையம் அமைந்துள்ளது. இங்கு காலை 10.30 மணி முதல் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது.

இந்த முகாமில் 8-ம் வகுப்பு பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.ஐ.டி, கணினி பயிற்சி பயின்றவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்க வருபவர்கள் கல்வி சான்றிதழ்கள், சுய விவரக் குறிப்பு ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும். எனவே படித்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

Categories

Tech |