தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதனால் இதுவரை இலட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் அரசு சார்பாக அரசு துறை வேலைவாய்ப்புகளும் மூன்றாவது வாரம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றது.
அவ்வகையில் இன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. 18 வயது முதல் 30 வயது வரையிலான பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பு முடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் .