Categories
மாநில செய்திகள்

“இளைஞர்களே உஷார்!”… இப்படியெல்லாம் ஏமாற்றும் பெண்கள்.. இந்த தளத்தில் ஏமாற்றப்பட்ட இளைஞர்..!!

கர்நாடகாவில் மேட்ரிமோனியல் தளத்தில் சந்தித்த பெண் ஒருவர் தன்னை மிரட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிக்கும் அம்பித் குமார் மிஸ்ரா என்ற இளைஞர் தன்னை திருமணம் செய்ய ஒப்புக் கொண்ட பெண் தன்னை ஏமாற்றியதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதாவது அம்பித் பிரபல மேட்ரிமோனியல் தளத்தில் திருமணத்திற்காக பெண் தேட பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அந்த தளத்தின் மூலமாக ஸ்ரேயா என்ற பெண்ணுடன் அம்பித் குமார் அறிமுகமானார்.

அதன் பின்பு அம்பித்தை திருமணம் செய்து கொள்வதாக ஸ்ரேயா கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து தொலைபேசியில் இருவரும் பழகி வந்த நிலையில் வீடியோ கால் மூலமாகவும் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி அன்று இருவரும் தனியாக வீடியோ காலில் பேசிய போது ஸ்ரேயா திடீரென உடைகளை கழற்றியதோடு அம்பித்தையும் கட்டாயப்படுத்தியுள்ளார். அவரும் தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் தானே என்று தன் உடைகளை கழற்றியுள்ளார்.

அதன் பின்பு ஸ்ரேயா இது அனைத்தையும் பதிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் தான் வீடியோ காட்சிகளை அழிப்பேன் என்று மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அம்பித் 20,000 ரூபாய் முதலில் கொடுத்துள்ளார். எனினும் தொடர்ந்து ஸ்ரேயா பணம் கேட்டு தொல்லை செய்ததால் அம்பித் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். எனவே காவல்துறையினர் இவர்கள் நேரில் சந்திக்கவில்லை என்பதால் இதனை இணையவழி குற்றமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |