பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் (24) என்ற இளைஞருக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் உள்ளது. கடந்த மே 15ஆம் தேதி வழக்கம் போல போதை ஊசி செலுத்தி அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மே 16ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ராஜ்குமாரின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போதைப் பொருளுக்கு பிரபலமான சதான் வாலி பாஸ்தி பகுதியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அதே பகுதியை சேர்ந்த ககன்தீப் சிங், சூர்யா,காளி மற்றும் மணி சிங் ஆகிய 4 பேர் மீது இந்திய சட்ட பிரிவு 304 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் ஆணையர் லட்சுமன் சிங் கூறுகையில், போதைப்பொருளுக்கு அடிமையான அந்த இளைஞர் அளவுக்கு அதிகமாக அல்லது தவறான நரம்பில் ஊசியை செலுத்தி இருக்க வேண்டும். அதனால்தான் திடீரென அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் வாழ்க்கை மரணத்தில் முடிவது வழக்கமாகிவிட்டது.