தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து ஊரடங்கு தளர்வுகள்அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஏப்ரல் 22) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என வேலை வாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாம் கிண்டி தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் எட்டாம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் (வயது 30க்குள் இருக்க வேண்டும்) வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். எனவே இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிட வேண்டாம்.