சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து இன்று மே 27 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த வேலை வாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதை 30 வயதுக்குட்பட்ட 8,10,12, ITI , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்துகொள்ள வருவோர் கல்விச்சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் எடுத்து வர வேண்டும். கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை வாய்ப்பு முகாம் நடத்த படாமல் இருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.