தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து தொழில் நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு அதிகம் இல்லாத சூழல் நிலவி வந்தது. இதனால் போட்டி தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வருவதை அடுத்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பின்மையை தவிர்க்கும் அடிப்படையில் அரசு மற்றும் தனியார்த்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
#தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என்றும் இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்
#இன்று ( பிப்.25) காலை 10.30 மணி
பதிவுதாரர்கள் தகுதி
# 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் பங்கேற்கலாம்.
# மேலும் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.