தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் திமுக கட்சி பல துறைகளில் நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் கொரோனா காலகட்டத்தில் மாநிலமே முடக்கப்பட்டு பெரும்பாலானோர் வேலை இன்றி சிரமப்பட்டனர். இதனை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மேலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி (இன்று) மார்ச்-4 மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் வேலை தேடுபவர்கள் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள நாள்
# இன்று (மார்ச் 4)
தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்
# மதுரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நடைபெறும். இம்முகாமில் தனியாா் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று கல்வித் தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞா்களைத் தோ்வு செய்ய இருக்கின்றனர்.
பதிவுதாரர் கல்வி தகுதி
# இந்த முகாமில் 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு ,முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம்.
வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு முக்கிய தகவல்
வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை அளிக்கும் நிறுவனங்கள் இணையதளத்தில் முன்பாகவே தங்கள் சுய விவரங்களை பதிவுசெய்ய வேண்டும்.
ஆகவே முகாமில் பங்கேற்க விருப்பம் இருப்பவர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் இன்று காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து முகாமில் கலந்துகொள்ளலாம். இம்முகாம் வாயிலாக தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பாதிக்கப்படாது என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு) ஆ.ராமநாதன் தெரிவித்து உள்ளாா்.