மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் படித்து முடித்து வேலையின்றி இருக்கும் இளைஞர்களின் நலனுக்காக அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்புமுகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் இப்போது கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கடலூா் மாவட்ட நிா்வாகத்தின் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன. அத்துடன் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு, கலை அறிவியல், நர்சிங், வணிக பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்த அனைவருமே பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே விருப்பமும், தகுதியும் பெற்ற இளைஞர்கள் தமிழ்நாடு தனியாா்துறை வேலைவாய்ப்பு துறையின் இணையதள முகவரி பக்கத்துக்கு சென்று பதிவுசெய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வேலைவாய்ப்பு முகாம் கடலூா் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூா், கொள்ளுக்காரன் குட்டையிலுள்ள வள்ளலாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி இந்த வேலைவாய்ப்புமுகாம் குறித்த தகவலை அறிய விரும்பினால் 04142-290039, 9499055908 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.