கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வேலை வாய்ப்பினை இழந்து தவித்து வருகின்றனர். எனவே மக்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன் மூலமாக வேலைவாய்ப்புகளையும் வழங்கிவருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமானது இன்று காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை நடைபெறும். இதில் 18 வயது முதல் 45 வயது உடையவர்கள் கலந்துகொள்ளலாம். ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.