Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே மறந்துராதீங்க…! இன்று ஊதியத்துடன் பயிற்சி…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

கடந்த 2015 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி திறன் மற்றும் தொழில் கல்விக்கான தேசிய கொள்கை, போதுமான ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கான தொழிற் பயிற்சியை அங்கீகரித்தது. இதன் மூலம் நாட்டில் உள்ள நிறுவனங்களில் பயிற்சியாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நாடு இன்று முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்பயிற்சி விழா நடத்தபடுகிறது. இந்த பயிற்சியை திறன் இந்தியா பயிற்சி இணை இயக்குனரகத்துடன் இணைந்து நடத்துகிறது.

400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாதம் 3000 உதவித்தொகையும், இண்டர்ஷிப்பின் போது  ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.  இதற்கு www.nimionlineadmission.in  என்ற தளத்தில் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |