மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ஏப்ரல் 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் மூலமாக தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருக்கும் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மெக்கானிக், கேசியர், அக்கவுண்டன்ட், தட்டச்சர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், சூப்பர்வைசர், மேலாளர், எக்ஸிக்யூட்டிவ், மார்க்கெட்டிங், விற்பனையாளர் போன்ற பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வர். இந்த முகாமில் பள்ளி படிப்பு, பட்டபடிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். எனவே தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களுடைய அசல் கல்வி சான்றிதழ் நகலுடன் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.