Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இளைஞர்களே ரெடியா?…. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் வேலை தேடுவோர் ஆனைபேட்டை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்திற்கு நேரில் சென்று முகாமில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |