Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா இருங்க…. சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அவ்வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகின்றது.

இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொலைநெறி வழிகாட்டு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி வரை படித்த அனைவரும் பங்கேற்கலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் இந்த அரிய வாய்ப்பை வேலை இல்லாத இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |