தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பல தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றன. அவ்வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் ஒன்றிணைந்து வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் ஜூலை 22 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்துள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். அதிகபட்ச வயது வரம்பு 30 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வரும் அனைவரும் கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.